மு.கா. தலைவரை விளித்து, அம்பாறை மாவட்டத்தில் துண்டுப் பிரசுரம்
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசம் எங்கும், மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமை விளித்து, பல கேள்விகளுடன் துண்டுப்பிரசுரமொன்று கடந்த இரவு விநியோகிக்கப்பட்டுள்ளது.
போராளிகள் – ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (1987) எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப் பிரசுரத்தில், மு.கா. தலைவரை நோக்கி பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்துக்கு இன்று திங்கட்கிழமை அமைச்சர் ரஊப் ஹக்கீம் வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்தத் துண்டுப் பிரசுரம் வெளியாகியுள்ளது.
குறித்த துண்டுப் பிரசுரத்தின் விபரம் வருமாறு;
அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களே.
இனப் பிரச்சினைத் தீர்வுக்காக முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில்,

முஸ்லிம் அரசியலுக்காக மாமானிதர் அஸ்ரப் அவர்களினால் முன்மொழியப்பட்ட
1. மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை பாதுகாக்கப்படுமா?
2. பேரம் பேசும் சக்தியை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்த விகிதாசாரத் தேர்தல் முறை பாதுகாக்கப்படுமா? அல்லது தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டு பேரம் பேசும் சக்தி இல்லாதொழிக்கப்படுமா?
3. கல்முனை கரையோர மாவட்டம் பெற்றுத்தரப்படுமா?
4. இனப்பிரச்சினைக்கான தீர்வின்போது, முஸ்லீம்களுக்கான சமனான அதிகாரமுள்ள அதிகார அலகு பெற்றுத்தரப்படுமா?
5. இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வடமாகாண முஸ்லீம்களின் உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படுமா?
அல்லது, கொமிஷன்களை கொட்டும் கொழுத்த அமைச்சுப் பதவிகளுக்காகவும், கைமாற(றி) இருக்கும் மேற்குலகின் பணப் பெட்டிகளுக்காகவும், முழு முஸ்லிம் சமூகத்தையும் விற்றுவிடப்போகிறீர்களா? அல்லது புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்று சமாளிக்கப்போகிறீர்களா?
தெளிவான பதிலை அவசரமாக பகிரங்கமாகச் சொல்லுங்கள்.