மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

🕔 November 13, 2016

Murder - 09கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 08 மற்றும் 10 வயதுடைய பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம் பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்