மைத்திரி, சந்திரிக்கா ரகசிய சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா குமாரதுங்க ஆகியோருக்கிடையில் மிகவும் ரகசியமான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நண்பகல் 12.30 மணிளவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் இல்லத்துக்கு சென்றுள்ளார்.
இதன்பின்னர் இருவரும் தனியே சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது எவரும் அங்கிருக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் பேச்சுவார்த்தையின் முடிவுகளை அடுத்த வாரத்தில் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சந்திரிக்காவின் தரப்பு தெரிவித்துள்ளது.