பேயோட்டி என்றார் ஹக்கீம்; அவமானத்தால் நெளிந்தார் பாயிஸ்: புத்தளத்துப் புதினங்கள்

🕔 November 12, 2016

hakeem-098– முன்ஸிப் அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளத்தில் இடம்பெற்றது.

மு.காங்கிரசை விட்டும் விலகியிருந்த, அந்தக் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசிஸ் இணைந்து கொண்டமையினை அடுத்து, இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றினை பாயிஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

மேற்படி பொதுக் கூட்டத்தில் பலரும் உரையாற்றினார்கள். இறுதியாக கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் பேசினார். இதன்போது, பாயிசை ஹக்கீம் “பேயோட்டி” எனக் கூற, மேடையிலிருந்தவர்களும் பார்வையாளர்களும் கொல்லென சிரித்தனர். பாயிசுக்கு பெருத்த அவமானமாகி விட்டது. ஆனாலும், அவமானத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஹக்கீமின் பேச்சுக்கு பாயிசும் சிரித்துச் சமாளித்தார்.

மயில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுத்தீனை விரட்டுவதற்கு, தனக்கு சரியான  ஒரு பேயோட்டுபவர் தேவைப்பட்டதாகவும், அதற்குப் பொருத்தமான பேயோட்டியாக பாயிஸ் கிடைத்து விட்டதாகவும் ஹக்கீம் கூறியமையினாலேயே பாயிஸ் அவமானத்தால் நெளிய நேரிட்டது.

புத்தளம் பள்ளிவாசல்களின் நிருவாகிகள் தன்னைச் சந்தித்தபோதும், தனக்கு நல்லதொரு பேயோட்டி கிடைத்து விட்டதாக – தான் கூறியதாகவும், தனது உரையில் ஹக்கீம் கூறி மகிழ்ந்தார்.

உண்மையில், பாயிஸ் தொடர்பில் மு.கா. தலைவர் ஹக்கீமுடைய மதிப்பீடு இதுதான். பாயிஸ் ஒரு ‘சண்டியன்’ என்பதை விடவும் – பெரிய அபிப்பிராயங்கள் எதுவும் ஹக்கீமிடம் இல்லை.

அதனால்தான் பாயிசை ஒரு பேயோட்டி என்று, அவரின் எதிரிலேயே ஹக்கீமால் கூற முடிந்தது.

இதைத் தவிர, பாயிசை கட்சிக்கான ஒரு கொள்கை வகுப்பாளராகவோ, சிந்தனையாளராகவோ ஹக்கீம் சேர்த்தெடுக்கவில்லை. அமைச்சர் றிசாத் பதியுத்தீனை புத்தளத்தை விட்டும் விரட்டியடிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் மட்டும்தான், பாயிசை ஹக்கீம் சேர்த்து எடுத்துள்ளார்.

இதனூடாக, ஹக்கீம் தனது வன்முறை அரசியல் மனோபாவத்தினையும் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.

ஒருவரை புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதை ‘வஞ்சப் புகழ்ச்சி’ என்று தமிழில் சொல்வார்.

புத்தளம் பாயிசை, ஹக்கீம் ‘பேயோட்டி’ என்று சொன்னதும் – இந்த ரகத்தினுள்தான் அடங்கும்.

இது இவ்வாறிருக்க, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் போயோட்டுவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரஊப் ஹக்கீம் –  தனிப்பட்ட வகையில் ஒரு விடயத்தில் தப்பமுடியாத படிக்கு அகப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், றாகம லொக்கு சீயா என்று அழைக்கப்படும் நியாஸ் தெய்யோ என்பவரிடம் பேயோட்டச் சென்றிருந்த விடயம் குறித்து, புதிது செய்தித் தளம் முன்னர் செய்தியொன்றைத் தந்திருந்தது.

லொக்கு சீயா எனும் பேயோட்டியிடம் ஹக்கீம் சென்றபோது, புத்தளம் பாசிசைத்தான் அழைத்துச் சென்றார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

லொக்கு சீயா எனும் பேயோட்டியை ஹக்கீம் சந்திக்கச் சென்ற செய்தியை வாசிப்பதற்கு: புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

வீடியோ

Comments