வானொலிக்குள் கைக்குண்டு; இலத்திரனியல் பழுது பார்க்கும் நிலையத்தில் சம்பவம்

🕔 November 11, 2016
grenade-0978– பாறுக் ஷிஹான் –

வுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவரால் நடத்தப்படும் கடையிலிருந்த  வானொலிக்குள்ளிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை  கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 40 வயதுடைய பி. மகிந்தன் என்பவர், கடந்த 03 வருடங்களாக இலத்திரனியல் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

அவர், பழைய பொருட்களைச் சேகரிக்கும் நபர் ஒருவரிடமிருந்து, இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றினைக் கொள்வனவு செய்திருந்தார். அதில் குறிப்பிட்ட வானொலியும் இருந்தது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட வானொலியைத் திருத்த முற்பட்டபோதே, அதனுள் கைக்குண்டொன்று காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.grenade-0977 grenade-0976

Comments