இனவாதி தயாகமகேயை, முஸ்லிம் தரகர்களே உருவாக்கினர்: முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சபீஸ்

🕔 November 8, 2016
safees-098றக்காமத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையினை அகற்ற முடியாது என வாதிடும் அமைச்சர் தயாகமகே எனும் இனவாதியை உருவாக்கியவர்கள், முஸ்லிம் தரகர்களாவர் என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், புத்தர் சிலை எங்கும் வைக்கப்படலாம், ஆனால் அகற்ற முடியாது என, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான தயாகமகே பேசியிருப்பது மிலேச்சத்தனமானமாகும் என்றும் சபீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் சபீஸ் மேலும் தெரிவிக்கையில்;
 
“பல நாடாளுமன்ற தேர்தல்களில் அம்பாறை மக்களால் தோற்கடிக்கப்பட்ட இனவாதி தயாகமகே. இவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மக்கள் குறைந்தளவிலான வாக்குகளை அழித்திருந்தும், முஸ்லிம்மக்கள் சுமார் 20 ஆயிரம் வாக்குகளை வாரிவழங்கி வெற்றி பெறவைத்தனர்.
 
இதற்கு காரணம் முஸ்லிம் மக்களுக்கு இனவாதி கமகே  செய்த   சேவைகள் அல்ல. மாறாக,   பணத்துக்கும் சாராயத்துக்கும் அடிமைப்பட்ட முஸ்லிம் தரகர்கள்,  ஏழ்மையில் வாழ்ந்த எமது  மக்களை ஏமாற்றி வெறும் 500 ரூபாயை கொடுத்து அவர்களின் வாக்குரிமையை அபகரித்து, எமது மக்களின் உரிமைகளை துரோகியின் காலடியில் கொண்டுபோய் சேர்த்தனர்.
 
முற்போக்கு சிந்தனை கொண்டு சிந்திப்பதற்கு தயாரில்லாத நமது மக்களில் ஒரு குழுவினர், 500 ரூபாய் கொண்டு ஏதோ உலகத்தை வாங்கிவிடலாம் என நினைத்து, 0வருட எமது சமூக உரிமையை இனவாதிக்கு  தாரைவார்து விட்டனர். நாம் தயாகமகேயை விடவும் இந்த விடயத்தில் நமது மக்களைத்தான் நொந்து கொள்ளவேண்டும்.
கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையிலான பகுதிகள் தீகவாபிக்கு சொந்தமானது என கூறியுள்ள இனவாதி துரோகி தயாகமகேவுக்கு, பதில் சொல்ல, காலம் மாறும். பொறுத்திருப்போம்” எனக் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்