ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர் புகைத் தாக்குதல்
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மீது, கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஓய்வூதியம் பெறும் கால எல்லையான 12 வருடத்தினைப் பூர்த்தி செய்யாது ராணுவத்தில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர்.
இவர்கள் மீதே, கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்றபட்டமையை அடுத்தே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தமக்கு ஓய்வுதியம் வழங்க வேண்டும் என கோரியே இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த ஊனமுற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதல் இவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.