இறக்காமம் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு
🕔 November 2, 2016


– றிஜாஸ் அஹமட் –
இறக்காமக் குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இறக்கமப் பிரதேச நன்னீர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும், இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் இறக்காமப் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் மற்றும் மாவட்ட மீன்பிடிப் பணிப்பாளர் ரோஹித ஆகியோர் அதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அரசினால் ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இறக்காமக் குளத்தில் விடப்பட்டதுடன், பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கான அனுமதி பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் இறக்காமப் பிரதேச மீனவர்களும் கலந்து கொண்டனர்.

Comments

