சீ.எஸ்.என். ஒளிபரப்பு அனுமதி ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிரான மனு விசாரணைக்கு
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை அனுமதியளித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலலேகொட உள்ளிட்ட நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரை, இந்த விடயம் குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.