அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது
– முன்ஸிப் –
அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்பினை வழங்கும் நிறுவனம் ஆகியவற்றின் திறப்பு விழாவும், ‘வி கேர் ஃபொர் யு’ (we care for you) தொண்டு நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வும் – நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அமைந்துள்ள, குறித்த நிறுவனங்களின் அலுவலகக் கட்டிடத்தில், ஒரே கூரையின் கீழ் இடம்பெற்றன.
மேற்படி நிறுவனங்களின் தலைவர் எம்.ஏ.எம். சர்ஜுன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எல். நூறுல் மைமூனா, கல்முனை மாநகர மேயர் நிஸாம் காரியப்பர், கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி. முகைதீன் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் கலந்து கொண்டு, குறித்த நிறுவனங்களை சம்பிரதாயபூர்வமான ஆரம்பித்து வைத்தனர்.
இதன்போது, ‘வி கேர் ஃபொர் யு’ (we care for you) தொண்டு நிறுவனத்தின் சார்பில், அதன் தலைவர் எம்.ஏ.எம். சர்ஜுனின் சொந்த நிதியிலிருந்து – வறிய மாணவர்களுக்கான பாடசாலைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வுகளில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கீப், தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் மற்றும் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.