இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது

🕔 October 30, 2016

earthquake-italy-0121த்தாலியின் நோசியா நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டமையினால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியிருந்ததோடு, பல நகரங்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நில அதிர்வில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக இதுவரை அறியக்கிடைத்துள்ளது. மேலும், சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இவ்ற்றில் புராதன கட்டிடங்களும் உள்ளடங்குகின்றன.

கடந்த வாரம் இப்பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டமை காரணமாக, இப்பகுதியின் குடியிருப்பாளர்களில் அதிகமானோர் அவசர முகாம்களுக்கும், ஹோட்டல்களுக்கும் சென்று தங்கியுள்ளனர். இதேவேளை, இப்பகுதியிலுள்ள பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.earthquake-italy-0122

Comments