மத்திய வங்கி முறி மோசடி; அர்ஜுன் மகேந்திரனுக்கு தொடர்பு: கோப் அறிக்கையில் தெரிவிப்பு

🕔 October 28, 2016

Parliament - 0011த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, கோப் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பான கோப் குழுவின் இறுதி அறிக்கை, கோப் குழுத் தலைவர் சுனில் ஹந்துனெத்தியினால் நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜுன் மகேந்திரன் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அர்ஜுன் மகேந்திரன் உட்பட இவ்விடயத்துடன் தொடர்புடைய ஏனைய அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படல் அவசியம் எனவும், குறித்த இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்