சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு
சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒளிபரப்பு சட்டங்களை மீறியமைக்காகவே, சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீ.எஸ்.என். நிறுவனம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விஷன் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பானது 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி 142163 என்ற இலக்கத்தின் கீழ், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிறுவனம் இயங்கிய காணியையும், கட்டடத்தையும் நகர அபிவிருத்தி அதிகார சபை கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி கையகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.