நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, கொண்டு செல்லப்பட்ட பஸ் தீக்கிரை

🕔 October 24, 2016

bus-005
– க. கிஷாந்தன் –

நானுஓயா பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீடிரென தீ பற்றி எரிந்துள்ளதாக நானுஓயா பொரிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ பகுதியில், இவ்வாறு குறித்த பஸ் தீக்கிரையாகியுள்ளதாக ஆரம்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வழமைபோல் நானுஓயா நகரத்தில் நிறுவத்தி வைக்கப்பட்ட பஸ் வண்டியினை, இன்று அதிகாலை 1.30 மணியளவில், நகரத்தில் இருந்து சம்பவம் நடத்த இடத்துக்கு இனந்தெரியாதவர்கள் கொண்டு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்தோடு குறித்த பஸ் சாரதியை தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நுவரெலியா குற்ற பரிசீலனை பிரிவினரும், நானுஓயா பொலிஸாரும் மேலதிக விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.bus-006 bus-004 bus-009

Comments