நாடாளுமன்றம் கலைகிறது
நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென தெரியவருகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்படுமாயின், ஓகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுமெனவும், செப்டம்பர் 01 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய தேர்தல் முறைமையினை உள்ளடக்கிய 20 ஆவது அரசியல் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே – நாடாளுமன்றம் கலைக்கப்படுமென, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னர் தெரிவித்திருந்தார் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
ஆயினும், தற்போது அரச தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தேர்தல் திருத்தம் தொடர்பில், சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் வெளியிட்டு வருகின்றன.
இதனால், 20 ஆவது அரசியல் திருத்தத்தினை நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்வதில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன.
இதனையடுத்தே, தற்போதைய நாடாளுமன்றத்தினை கலைப்பதற்கான முடிவினை ஜனாதிபதி எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.