அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

🕔 October 20, 2016

ravi-08டுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்கு 16 ஆயிரத்து 340 கோடி ரூபாவும், சுகாதார துறைக்கு 16 ஆயிரத்து 94 கோடி ரூபாவும், கல்விக்காக 07 ஆயிரத்து 694 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இம்முறை வரவு – செலவுத்திட்டத்தின் மொத்த ஒதுக்கீடாக ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 400 கோடி ரூபா காணப்படுகிறது. இது, கடந்த வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டினை விட 75 ஆயிரத்து 500 கோடி ரூபா குறைவாகும்.

எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பித்த போதே, மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று 10.30 மணியளவில் கூடியதையடுத்து, குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த சட்டமூலம் தொடர்பான முதலாம் வாசிப்பை நிதியமைச்சர் நிகழ்த்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்