குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம்

🕔 June 26, 2015

Explosion - Kuwait - 01குவைத்திலுள்ள ‘இமாம் அல் – சாதிக்’ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் 08 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குவைத் – ‘சவபர்’ மாவட்டத்திலுள்ள இந்தப் பள்ளிவாசலினை அதிகமாகப் பயன்படுத்தும், ‘ஷையிடி’ முஸ்லிம் இனக் குழுவினரை இலக்கு வைத்தே, இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள், குவைத் ‘எமிரி’ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments