சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

🕔 October 16, 2016

shibly-farook-098
– எம்.ரீ. ஹைதர் அலி –

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

தமது வாழ்வாதாரத்துக்குரிய மீன்பிடி தொழிலினை மேம்படுத்துவதற்கு உதவி செய்யுமாறு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இரு மீனவ குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

அதற்கமைவாக, தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகை மீன்பிடி உபகரணங்களை, அவ்விரு மீனவர்களுக்கும் நேற்று சனிக்கிழழை காத்தான்குடியிலுள்ள தனது காரியாலயத்தில் வைத்து, மாகாணசபை உறுப்பினர் வழங்கினார்.

மற்றவர்களின் தயவில் தங்கி வாழாமல், தங்களது முயற்சியினால் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று – பாரிய சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான வருமானத்தினை பெற்றுக் கொடுக்கும் – தொழிலுக்கான உபகரணங்களை வழங்குவதுதான் சிறந்த நடவடிக்கையாகும் என்று, இதன்போது ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.shibly-farook-097

Comments