லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை

🕔 October 14, 2016

suicide-013ண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, ஓய்வு பெற்ற சார்ஜன் மேஜர் தரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை அவருடைய கேகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தரகே ஜயமான எனும் பெயருடைய மேற்படி நபர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்டவர் எழுதிய கடிதத்தில், லசந்தவை தானே கொலை செய்ததாகவும், தற்போாது லசந்த கொலை வழக்கு தொடர்பில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பிரேமானந்த உடலகம என்பவருக்கும் லசந்த கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள உடலகமவை விடுவிக்குமாறும் தற்கொல செய்தவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்கொலை செய்து கொண்டவர் ராணுவத்திலிருந்து 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் என தெரியவருகிறது. ஆனால், லசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

தற்கொலை செய்து கொண்ட 51 வயதுடைய மேற்படி நபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

சடலம் தற்போது கேகாலை பொது வைத்தியசாலைக்கு, பிரேத பரிசோதனைக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.letter-0112

Comments

புதிது பேஸ்புக் பக்கம்