300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில்

🕔 October 12, 2016

accident-011
– க. கிஷாந்தன் –

டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாரன்டன் தோட்ட பகுதியில், இன்று புதன்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த நபர்கள்-  நானுஓயா கெல்சிமா எலிய பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நுவரெலியாவுக்கு திரும்பி சென்ற வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, படுகாயமடைந்த ஏழு பேரும் கவலைக்கிடமான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி டிப்பர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.accident-01122

Comments

புதிது பேஸ்புக் பக்கம்