ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

🕔 October 11, 2016

daham-sirisena-0111னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிரப் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே, தஹம் சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஹம் சிறிசேனவுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேனவும், அவருடன் சென்ற சகாக்களும், இரவுநேர களியாட்ட விடுதியொன்றினைத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரையும் அடித்துக் காயப்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டினை அடுத்தே, ஜனாதிபதி இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளார் என்று, கொழும்பு ரெலிகிரப் மேலும் தெரிவித்துள்ளது.

இரவு நேர களியாட்ட விடுதிக்கு தன்னுடைய புதல்வர் செல்வதை, ஜனாதிபதி அனுமதிப்பதில்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments