கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு
🕔 June 26, 2015
– பாறுக் ஷிஹான் –
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 07 பேரை, கிளிநொச்சியில் வைத்து – நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து, 06 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 04 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ பாட், தங்கக் கைச்சங்கிலி, தங்க மாலை, டி.வி.டி பிளயர் ஆகியவற்றினை பொலிசார் கைப்பற்றினர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது;
செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் கையை வெட்டிய குற்றச்சாட்டில், மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று முன்தினம் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில், ஏற்கனவே 11 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவரின் கையை வெட்டிய குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவரிடமிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதுடன், அவருடைய கைத் தொலைபேசியும் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை நடவடிக்கையுடன் தொடர்புடைய கொள்ளைக்கார கும்பலுடன், சந்தேக நபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இவ் விவகாரம் தொடர்பில் தீவிர நடவடிக்கையில் இறங்கிய மானிப்பாய் பொலிஸார், கொள்ளையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களை, கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் வைத்து நேற்று வியாழக்கிழமை மடக்கிப் பிடித்தனர்.
பொலிஸாரிடம் இவ்வாறு சிக்கிய சந்தேக நபர்கள் – கிளிநொச்சி, மானிப்பாய், கட்டுடை மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.