75 வயது பிக்கு மீது, ராணுவ வீரர் தாக்குதல்
– எப். முபாரக் –
திருகோணமலை – கோட்டை விகாரையின் விகாராதிபதி தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் தம்ம லங்கார ஹிமி (75வயது) எனத் தெரிய வருகிறது.
ரானுவ வீரரொருவர் தன்னை தாக்கியதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தேரர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.