வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில்
மல்வானை – கங்கபட வீதியில் காணியொன்றை விலைக்கு பெற்று, அதில் வீடொன்றை அமைப்பதற்கு அரசாங்க நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காணியும் வீடும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக மேற்படி வழக்கு விசரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் அந்தக் காணி தனக்கு சொந்தமானது இல்லை என, இன்று வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மல்வானை கங்கபட வீதியில் அமைந்துள்ள வீடு மற்றும் 16 ஏக்கர் காணி தனக்கு சொந்தமானது இல்லை என பூகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அதனடிப்படையில், குறித்த சொத்துக்கள் தொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 14ஆம் திகதி வழங்கப்படும் என பூகொடை பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.