எட்டு வருடங்களுக்குப் பின்னர், லசந்தவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது

🕔 September 27, 2016

Lasantha - 087ண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் தோண்டியெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரின் உடல் பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

லசந்தவின் உடலை தோண்டியெடுக்க வேண்டுமென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியது.

அத்திட்டிய பகுதியில் வைத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள், லசந்தவை 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சுட்டுக் கொன்றனர்.

லசந்த விக்கிரமதுங்க  தனது அலுவலகத்துக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

Comments