காலியில் நில அதிர்வு; பாதிப்புகள் எவையுமில்லை

🕔 September 27, 2016

earthquake-011காலியில் இன்று சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

காலி – ஹபுகல பகுதியில் இன்று செவ்வாய்கிழமை  5.30 மணியளவில்  இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

ஆயினும், இந்த அதிர்வினால் பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

எவ்வாறாயினும் ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவின், நிகோபார் தீவுக்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு, காலியில் உணரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டியதில்லை என்று பிரதீப் கொடிபிலி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்