ஐ.நா.வுக்கான விஜயத்தை நிறைவு செய்து, நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, கடந்த 18 ஆம் திகதி, ஐ.நா. தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள அமெரிக்காவின் நிவ்யோர்க் நகர் சென்றிருந்தார்.
ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் இம்முறை ஜனாதிபதி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி மைத்திரி உரையாற்றிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, கயந்த கருணாதிலக்க, நிமல் சிறிபால டி சில்வா, அர்ஜுன ரணதுங்க, பைசர் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொலொன்ன உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.