காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

🕔 September 25, 2016

hisbullah-087
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளராகவும் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பணியாற்றி வருகின்றார்.

வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர், தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் நிர்மாண வேலைகள் தொடர்பிலும் அதன் ஏனைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும்  வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம். ஜாபிரிடம் கேட்டறிந்து கொண்டதோடு, ஆலோசனைகளையும் வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்