நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர்.
கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது.
ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.
மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தற்போது விளக்க மறியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.