பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

🕔 September 24, 2016

Basheer - 03111– றிசாத் ஏ காதர் –

முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சிக்கு கடிதமொன்றினை எழுதியதாகத் தெரியவருகிறது.

மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை, அந்தக் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதும், அதில் தவிசாளர் பசீர் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், உயர்பீடக் கூட்டம் நடைபெற்ற தினம் – தவிசாளர் தனது கடிதத்தினை அனுப்பி வைத்திருந்ததாக அறிய முடிகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என, தனது கடிதத்தில் தெரிவித்திருந்த தவிசாளர் பசீர், அச்சுறுத்தலுக்கான காரணம் குறித்து,  விபரித்திருந்ததாகவும் – அது பாரதூரமான விடயம் எனவும், கட்சியின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மு.கா.வின் உயர்பீடக் கூட்டத்தில் பசீரின் கடிதம் குறித்து, உயர்பீட உறுப்பினர்களுக்கு மேலோட்டமாகவே தெரியப்படுத்தப்பட்டதாகவும், கடிதத்தை முழுமையாக வாசிக்காமல் மறைத்து விட்டதாகவும் அறிய முடிகிறது.

பாதுகாப்பின்னை காரணமாக, உயர்பீட கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதுள்ளதாக தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்று மட்டுமே, இதன்போது கூறப்பட்டுள்ளது.

உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில், தனக்கு எவ்வகையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதற்கு, தவிசாளர் தெரிவித்துள்ள காரணங்கள் சற்று அதிர்ச்சிகரமானவையாகும் எனவும் கட்சியின் உள் வட்டாரங்கள் கூறுகின்றன.

Comments