சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

🕔 September 24, 2016

mahinda-033
மு
ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் துணைவியார் சிராந்தியுடன் இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் வலம் வந்தார். இதன்போது, அவருடன் பொதுமக்கள் அளவளாவியதோடு, இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

நுவரெலியாவுக்கு நேற்றைய தினம் வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை கிரகரி வாவியைச் சுற்றி நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோதே பொதுமக்கள் அவருடன் அளவளாவிக் கொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷவும், மக்களுக்குக் கையசைத்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டார்.

இதன்போது, அதிகளவிலான பாதுகாப்பு அதிகாரிகள் மஹிந்தவுடன் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.mahinda-044mahinda-011

Comments