தலைப்புச் செய்திகள்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

shooting-usa-011மெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், ஒரு ஆணும் அடங்குகின்றனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக, வாஷிங்டன் பொலிஸ் அதிகாரி மார்க் ஃப்ரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலை ஒருவர் மட்டுமே மேற்கொண்டிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தாக்குதல்தாரி ஸ்பானிஷ் மொழி பேசுபவராக இருக்கக் கூடும் என்றும் மேற்படி பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தாக்குதல்தாரி, வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க நேரப்படி சுமார் 07 மணியளவில், சம்பவம் இடம்பெற்ற வணிக வளாகத்துக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர், சுமார் 20 – 25 வயதுடைய ஒருவர் என்றும், ஒல்லியான தோற்றமும், கருமையான முடியுடன் கருப்பு நிற சட்டை அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.shooting-usa-022