கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாசையாகும்: அமைச்சர் சரத் அமுனுகம

🕔 September 23, 2016

sarath-amunugama-98– ஏ.ஆர்.ஏ. பரீல் – 

முஸ்லிம் ஒரு­போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணை­வதை விரும்பவில்லை என்று விசேட திட்­டங்­க­ளுக்­கன அமைச்சர் சரத் அமு­னு­கம தெரிவித்தார்.

கிழக்கு பிரிந்­தி­ருக்க வேண்டும் என்­பதே அவர்­க­ளது அபி­லா­சை­யாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று பல்­லின மக்கள் வாழும் எமது நாட்டில், நாம் பேதங்­களை மறந்து எமது சமய அடை­யா­ளங்­களை பேணிக்­கொண்டு இலங்­கையர் என்ற பொது­வான அடையாளத்துடன் வாழ வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நாடா­ளு­மன்ற உரை உள்­ள­டங்­கிய ‘முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை கேளுங்கள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே, அமைச்சர் சரத் அமு­னு­கம மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இந் நிகழ்வு புதன்கிழமை மாலை, கொழும்­பு லக்ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் நடை­பெற்றது.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“நாம் பல இனங்­க­ளாக வாழ்ந்தாலும் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தை பிரதிநிதித்து­வப்­ப­டுத்­து­கிறோம். சிங்­க­ளவர், முஸ்லிம் மற்றும் தமிழர் என்ற பிளவில்லாது இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் இருக்­கிறோம்.

13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிக் குறிப்­பி­ட­வேண்டும். இத்­தி­ருத்தம் பல அபிவிருத்திகளை அடை­யா­ளப்­ப­டுத்­தி­யுள்­ளது. இவற்றில் முஸ்­லிம்­களின் அர­சியல் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைக் குறிப்­பி­டலாம்.

ஜே.ஆர். ஜய­வர்­த­னவின் காலத்தில் இலங்கை – இந்திய உடன்­ப­டிக்­கையின் கீழேயே 13 ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் ஒரே குழுவுக்குள் உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்­று தமிழர் ஐக்­கிய விடு­தலை முன்­னணி கூறியது.

இலங்­கை­யி­லி­ருந்து இந்­திய உயர்ஸ்­தா­னிகர் இந்த உடன்­ப­டிக்­கைக்கு தர­க­ராகச் செயற்­பட்டார்.

முஸ்­லிம்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய டொக்டர் கலீலும் ஜே.ஆர். ஜய­வர்­த­னவிடம் வந்­தார். இந்த மக்­களின் கருத்தை அறி­வ­தற்­கான பொது­ஜன வாக்­கெ­டுப்பு முறையில் பாரிய பிரச்­சினை இருப்­ப­தாகத் தெரி­வித்­தார். வடக்கும் கிழக்கும் இணை­வதால் முஸ்லிம் சமூகம் பாதிக்­கப்­படும் என்­பதை விளக்­கி­னார்.

13 ஆவது திருத்தச் சட்­டத்தின் கீழ் தற்­கா­லி­க­மாக வடக்கும் கிழக்கும் இணை­வதனால், முஸ்­லிம்கள் தமது உரி­மைக்­கான குரலை இழந்து விடு­வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இத­னை­ய­டுத்தே வடக்கும் கிழக்கும் இணை­வது குறித்து விவாதம் நடை­பெற்­றது. தமிழ் பிர­தி­நி­திகள் வடக்கும் கிழக்கும் நிரந்­த­ர­மாக இணைய வேண்டும் என்­றார்கள்.

இதேவேளை அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ெஜய­வர்­தன, வடக்கும் கிழக்கும் தற்கா­லி­க­மாக இணைக்­கப்­பட வேண்­டுமா அல்­லது வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்­டுமா என்­பது தொடர்பில் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் என்றார். என்றாலும் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வில்லை.

ஏனென்றால் முஸ்லிம்களும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்­களும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்பது தெளி­வா­கி­யது. அதனால் சர்­வ­சன வாக்­கெ­டுப்பு நடத்தப்படக்கூ­டாது என தமிழ் அர­சியல் தலை­வர்கள் வேண்­டி­னார்கள். இந்தப் பிரச்சி­னை­யை­ய­டுத்து பெரும்­பா­லான தமி­ழர்கள் நாட்டை விட்டும் வெளியேறினார்கள்.

இறு­தியில் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்கும் கிழக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்­பின்­படி இரண்­டாகப் பிரிக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­களின் சிறப்புரிமைகள் தொடர்­பாக, குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் உரி­மைகள் கேள்­விக்­கு­றி­யா­கிய ­சந்­தர்ப்­பத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மிகவும் பல­மான ஆதர­வா­ளரான டொக்டர் கலீல்,  ஜே.ஆர். ெஜய­வர்­த­னவைச் சந்­தித்தார். சந்­தித்து ‘தாங்கள் என்ன செய்­யப்­போ­கி­றீர்கள் என்று தெரி­யாது. நீங்கள் விரும்­பி­யதை செய்யுங்கள்’ என்றார்.

இதற்குப் பிறகே கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கான கட்­சி­யொன்று உரு­வா­கி­யது. இவ்வாறான சூழ்­நி­லை­யி­லேயே, லக்ஷ்மன் கதிர்­காமர் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் தனது கருத்­து­களை முஸ்லிம்களுக்கு ஆதரவாக வெளியிட்டார்.

முஸ்­லிம்கள் ஒரு­போதும் வடக்கும் கிழக்கும் இணை­வதை விரும்­ப­வில்லை. முஸ்லிம்கள் கிழக்கில் தனி­யான மாகாண சபை­யையே கோரி நிற்­கின்­றனர்.

இன்று வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண சபைகள் இயங்­கு­கின்­றன. முஸ்­லிம்கள் தங்­க­ளுக்கு கிழக்கில் தனி­யான மாகாண சபை கிடைத்­துள்­ளமை குறித்து மகிழ்ச்சிடைய முடியும். முஸ்­லிம்கள் வடக்கு கிழக்கு பிரிந்­தி­ருப்­ப­தையே விரும்புகிறார்கள்.

அஷ்ரப் முஸ்­லிம்­க­ளுக்­கென்று ஆரம்­பத்தில் கிழக்­கில் தனி கட்­சியை ஆரம்­பித்தார். அதன்­பின்பு தேசிய ரீதியில் சகல மக்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு நுஆ கட்­சியை ஆரம்­பிக்க தீர்­மா­னித்தார். இது சிறந்த முயற்­சி­யாகும்.

லக்ஷ்மன் கதிர்காமர் தெளிவாக ஒரு விடயத்தை கூறியிருக்கின்றார். நாம் எந்த இனத்தவராக இருந்தாலும் இலங்கையர் என்ற அடையாளத்தின் கீழ் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கிடையே அன்பு செலுத்த வேண்டும். எமது கலாசாரங்களை அடையாளப்படுத்திக்கொண்டு இலங்கையராக இருக்க வேண்டும். ஒவ்வொரு இனமும் தங்களுக்கிடையில் ஒற்றுமையாக வாழ வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்