காத்து வாக்கு: நாய் மாதிரி கத்தக் கூடாது

🕔 September 23, 2016

kv-02
– வழங்குபவர் வட்டானையார் –

நாய் மாதிரி கத்தக் கூடாது

முஸ்லிம் கட்சியோட உயரமான பீடத்து ஆக்களுக்கு முதுகெலும்பு இல்லையென்று பொத்தாம் பொதுவாச் சொல்ல ஏலாது. இந்த வாரம் – அந்தக் கட்சியோட உயரமான கூட்டம் நடந்தது பற்றி கேள்விப் பட்டிருப்பீங்கள். கூட்டத்துல பெரிய சுவாரசியங்கள் கிடையாது. காரணம், ‘செயலு’ம், ‘தவிசு’ம் கூட்டத்துக்கு வரல.

சரி, முதுகெலும்பு மேட்டருக்கு வாரன். “உயரமான கூட்டத்துல, நாய் மாதிரி கத்தக் கூடாது. உயரமான கூட்டம் என்டா அதுக்கு ஒரு மரியாதை இருக்கு. போன கூட்டத்துல, ‘தவிசு’ பேசும் போது, சிலர் நாய் மாதிரி கத்தினதால, ஒன்டும் விளங்கல. அந்தக் கூட்டத்துல ‘தவிசை’ பேச விட்டிருக்கனும். அவரு பேசறுதுல பிழையிருந்தால், அவரைக் கேள்வி கேட்டு, ஒரு கணக்குப் பார்த்திருக்கலாம். ஆனால், அந்தாள் பேசும் போது, இங்க இருக்கிற சிலர் – நாய் மாதிரி கத்தினதால, ஒன்டும் விளங்கயில்ல” என்டு கூறியிருக்கிறாரு, ஒரு உயரமான பீடத்து ஆளு.

‘ஹய்’... உயரமான பீடத்துல இப்டியொரு தைரியசாலியா என்டுதான கேக்கிறீங்க.

இந்தக் கதயக் கேட்டதும், நானும் ஆரம்பத்துல ‘ஷாக்’ ஆயிட்டன் மக்காள்.

ஒளிக்கப்பட்ட ரெண்டு மேட்டரு

இதுவும் முஸ்லிம் கட்சியின்ர உயரமான பீடத்துக் கதைதான். கடந்த கூட்டறிக்கைய, இந்த வாரம் நடந்த கூட்டத்துல சர்ச்சைக்குரிய செயலாளர் வாசிச்சிருக்காரு. ஆனால், கடந்த கூட்டத்துல நடந்த ரெண்டு மேட்டர்களை கூட்டறிக்கையில எழுதாம அவரு ஒளிச்சிட்டாராம்.

ஒளிச்ச மேட்டர் – 01: கட்சியின்ர தலைமையகம் சம்பந்தமாக, தலைவரிடம் நம்ம பாலமுனை சட்டத்தரணித் தம்பி, கோட்டுல கேக்கிற மாதிரி – கேட்ட கேள்விகளையெல்லாம், சர்ச்சைக்குரிய செயலாளரு எழுதாம ஒளிச்சிட்டாராம்.

ஒளிச்ச மேட்டரு – 02: முந்தைய கூட்டத்துல ‘தவிசு’ பேசும் போது, கூயெண்டு கொரக்காட்டின ஆக்கள் யாரு என்பதையும் எழுதாம ஒளிச்சிட்டாராம் சர்ச்சைக்குரிய செயலாளரு.

ஆனா, உயரமான பீடத்து ஆக்கள் கொஞ்சம் உஷார்தான். அந்த ரெண்டு மேட்டரையும், ஏன் எழுதாம ஒளிச்சிட்டீங்க என்டு கேட்டதோட, அதை எழுத வேணும் என்டும் வற்புறுத்தினாங்களாம்.

ஒழுக்க நெறி

மரக் கட்சியின் மேலிடம், அண்மையில கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஒரு ஒழுக்க நெறிக் கோவையை அனுப்பி வச்சிருந்தது. அதை எனக்கும் வாசிக்கக் கிடைச்சது.

உள்ளுரில் மரக் கட்சியின் எம்.பி.மார், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தும் போது, அந்தக் கூட்டங்களுக்கு உள்ளுரிலுள்ள கட்சியின் ஆக்களையும் கூப்பிடனும் என்டு அந்த ஒழுக்க நெறிக் கோவையில சொல்லப்பட்டிருக்கு.

உள்ளுர் கட்சி ஆக்கள் அந்தஷ்துல குறைவாக இருந்தாலும்,  அதையெல்லாம் ஒரு மேட்டரா பார்க்காம, அவங்கள கூப்பிடனும் என்டு லீடர் வலியுறுத்தியிருப்பதாக அந்த ஒழுக்க நெறிக் கோவை சுட்டிக் காட்டுது.

“கட்சியின் எம்.பி.மார் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் நடத்துற கூட்டத்துக்கு, எங்களை அழைக்கிறதில்ல” என்டு, லீடருக்கிட்ட உள்ளுர் கட்சி ஆக்கள் முறைப்பாடு பண்ணியதாலதானாம், இப்படியொரு ஒழுக்க நெறிக் கோவையை அனுப்ப வேண்டியேற்பட்டதாக சொல்லப்படுது.

மேலே சொன்ன ஒழுக்க நெறியை மீறினா, நடவடிக்கை எடுக்கப்படும் என்டெல்லாம், அந்தக் கோவையில் பயங்காட்டப்பட்டிருக்குது.

“இதுக்கெல்லாம் ஒரு ஒழுக்க நெறிக் கோவையா? உண்மையில், ஒரு முஸ்லிம் கட்சியின் ஒழுக்க நெறிக் கோவை எப்படியிருக்கணும். கட்சியில இருக்கிற எல்லோரும் ஐந்து நேரமும் தொழனும், களவெடுக்கக் கூடாது, கஞ்சா குடிக்கக் கூடாது, மதுவருந்தக் கூடாது, லஞ்சம் வாங்கக் கூடாது, பொம்புள மேட்டர நெனச்சுப் பார்க்கவும் கூடாது என்டுதானே ஒழுக்க நெறிக் கோவை இருக்கணும்” , என்டு நண்பரிடம் கேட்டன்.

நண்பர் ஒரு மாதிரி என்னை உற்றுப் பார்த்து விட்டு, இப்படிக் கேட்டாரு;

“அப்போ, கட்சியக் கலைக்கச் சொல்றீங்களா?”

அரசாங்கத்தின் தனாதிகாரி

லீடரோட அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட 2500 மில்லியன் ரூபாய் நிதியில, கிட்டத்தட்ட 1900 மில்லியன் ரூபாய், செலவு செய்யப்படாமல் திரும்பி போகும் நிலையில் உள்ளதாம்.

கடந்த ஜுன் மாசத்துக்கு முன்னராக, 2500 மில்லியன் ரூபாயையும் எப்டியெல்லாம் செலவு செய்யப் போறம் எங்குற திட்டத்த அனுப்பி வச்சிருக்கணும். ஆனால் லீடர் அனுப்பல. கடைசியில, ஒரு 600 மில்லியன் ரூபாவுக்கு – திட்டம் தயாரிச்சு கொடுக்கப்பட்டிருக்கு. அதுவும் கல்முனையின் காரியப்பர்தான் கடுமையாக ஓடியாடி 600 மில்லியன் ரூபாவை வென்று எடுத்திருக்கிறாராம். மிகுதி 1900 மில்லியன் ரூபாவும் அம்போதானாம்.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யுற அமைச்சராக லீடர் இருந்தபோதும், இப்படித்தானாம். வருகிற காசை செலவு செய்யாமல், அரசாங்கத்துக்கு திருப்பி அனுப்பி விடுவதில் அவரு ரொம்ப நல்லவராம்.

“இந்தாளு, மக்களுக்கு சேவை செய்யுற அமைச்சரா, இல்லாட்டி – அரசாங்கத்தின்ர தனாதிகாரியா” என்டு, மு.கா. முக்கியஸ்தர் ஒருவரே நம்மிடம் கேக்கிறாரு.

காத்து வாக்கு – 01: காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

Comments

புதிது பேஸ்புக் பக்கம்