வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ கோரிக்கை

🕔 September 20, 2016

yoshitha-8564வெளிநாடு செல்வதற்கு தன்னை அனுமதிக்குமாறு, யோசித ராஜபக்ஷ – கொழும்பு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யோசிதவின் இந்த கோரிக்கை தொடர்பில் நாளை மறுதினம் நீதிமன்றம் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது.

யோசித ராஜபக்ஷவின் கடவுச் சீட்டு, கடுவல நீதவான் நீதிமன்றத்தினால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சீ.என்.என். தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கு தொடர்பில், கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.

பின்னர் மார்ச் மாதம் – கொழும்பு உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

Comments