கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

🕔 September 16, 2016

Hakeem - 0123ல்ஹின்னை பிரதேசத்தில்  ஏற்பட்ட இனவாத பிரச்சினையையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

கல்ஹின்னை அசம்பாவிதம் குறித்து அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் நிலைமையை அவ்வப்போது அமைச்சர் ஹக்கீமிற்கும், அவரின் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கும் எத்திவைத்தனர்.

கொழும்பில் வேலைப்பளுக்கு மத்தியிலும், அமைச்சர் ஹக்கீம் – கண்டி பிரதி பொலிஸ்மா அதிபர் ஏகநாயக்க , அங்கும்புற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித ஜெயரத்தின ஆகியோர் உடன் தொடர்பை ஏற்படுத்தி ஆலோசித்தார். உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

விசேட அதிரடிப்படை கட்டளைத்தளபதி லத்தீப் வெளிநாடு சென்றுள்ள படியால், பதில் தளபதி மத்தும பண்டாரவுடன் தொடர்பு கொண்டபோது, மேலதிக தேவை ஏற்பட்டால் அவரது படையணியினர் அனுப்பிவைக்கப்படுவர் என கூறப்பட்டது.

பிரதேச மக்கள் அச்சத்துடன் இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றியும், பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது பற்றியும் , பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானமையினால், அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்துக்கும் பாதுகாப்பு வழங்குவது பற்றியும் அவர் கலந்துரையாடிதோடு, ஆலோசனைகளையும் வழங்கினார்.

பபிலாகொல்ல பள்ளிவாசல்தான் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அத்துடன் கல்ஹின்ன சந்தி கட்டாப்பு பள்ளி , தடகோல்லாதெனிய பள்ளி , மீறியல்ல பள்ளி என்பவற்றுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் , அமைச்சர் ஹக்கீம் , இன்ற வெள்ளிக்கிழமை முற்பகல் தமது பிரத்தியேக செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம். நயீமுல்லாஹ், தமது மக்கள் தொடர்பு அதிகாரியும்   முன்னாள் கண்டி மாநகர சபை உறுப்பினருமான அஸ்மி மரிக்கார் உட்பட,  அவரின் இணைப்பாளர்கள் சிலரையும் பிந்திய நிலைமையை அவதானித்து நடவடிக்கை எடுப்பதற்காக கல்ஹின்னை பிரதேசத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
அமைச்சர் ஹக்கீம் அவர்களின்
ஊடக ஆலோசகர் 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்