யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியாரான டய்சி பொரஸ்ரட் ஆகியோருக்குச் சொந்தமான கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியை, எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் சுலோச்சனா வீரசிங்க நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டார்.
குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில அளவை திணைக்களத்தின் பங்களிப்புடன் குறித்த காணியை அளவீடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அத்துடன் காணி அளவீட்டு பணியின் போது சந்தேகநபர்கள், காணி உறுதி பத்திரத்தின் மூல பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடுமாறும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த கோரிக்கைகளை ஆராய்ந்த கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் மேற்படி உத்தவினை பிறப்பித்தார்.
மேற்படி சுமார் 50 மில்லியன் ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.