புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

🕔 June 24, 2015

VC - Najeem - 01 எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் –

தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய உபவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் வரவேற்று வழங்கப்பட்டது.

முன்னைய உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீமை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார்.

சர்வ மதத் தலைவைகளின் ஆசியுடன் தனது பணிகளை ஆரம்பித்த பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம்,  பல்கலைக்கழக சட்ட விதிகளைக் கடைப்பிடித்து நேர்மையான முறையில் தனது பணிகளை தொடரவுள்ளதாகவும்,  அதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

47 வயதான உபவேந்தர் பேராசிரியர் நாஜிம், தனது உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழககத்தில் பெற்றார். பின்னர் –  தாய்லாந்து, மலேசியா, சீனா போன்ற பல்கலைக்கழகங்களிலும் கற்றார்.

பேராசிரியர் நாஜீம் 50ற்கும் மேற்பட்ட சர்வதேச ஆய்வரங்குகளில் தமது கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். VC - Najeem - 02VC - Najeem - 03

Comments