தந்தை, மகன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தந்தை மற்றும் மகன் உட்பட மூன்று நபர்களுக்கு, நுவரெலிய உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
06 ஓகஸ்ட் 2003 ஆம் ஆண்டு, நபரொவருவரைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேற்படி மூவருக்கும், நுவரெலிய உயர் நீதிமன்ற நீதிபதி லலித் எகநாயக, இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய நபரொருவரே, குற்றவாளிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
டயகம பிரதேசத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.