பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம்

🕔 September 9, 2016

dumindawele-099பாரத பிரேதமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் பி (B) 03 பகுதியிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாதுகாப்பின் நிமித்தமே அவர் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் சி 03 பகுதியிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

துமிந்த சில்வா சிறை வைக்கப்பட்டிருந்த மேற்படி வாட் இலக்கம் சி 03 பகுதியிலேயே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பொல விதானகே சமந்த குமார சிறைவைக்கப்பட்டுள்ளார்.

வெலே சுதாவின் வழக்கின் போது, அவர் – துமிந்த சில்வாவுக்கும், தனக்குமான கடந்த கால தொடர்பு குறித்து நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, துமிந்த சில்வாவுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தெமட்டகொட சந்திம, பாதுகாப்பின் நிமித்தம் கண்டி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Comments