லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு

🕔 June 24, 2015

L.club - AGM - 001– அஸ்ரப் ஏ. சமத் –

கொழும்பு  மாவட்டம் 237 ஏ லயன்ஸ் கழகத்தின் வருடாந்த மாநாடு,  கொழும்பு கோல்ப் கிளப்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கழகத்தின் தலைவா் லயன் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற மேற்படி வருடாந்த மாநாட்டில், புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது.

அந்தவகையில், புதிய தலைவராக லயன் ஆரிப் றிபாய்டீன் தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து, மாவட்ட லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் நீல் செனவிரத்னவிடம், புதிய தலைவர் தனது பொறுப்பினை  ஏற்றுக் கொண்டாா்.

கொழும்பு  மாவட்டம் 237 ஏ லயன்ஸ் கழகத்தின் புதிய செயலாளாராக லயன் இல்யாஸ், உப தலைவராக அஸ்ரப் ஹூசைன் ஆகியோர் தெரிவாகினர்.L.club - AGM - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்