ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

🕔 September 8, 2016

Lasantha - 087சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி, அத்திட்டிய பகுதியில் வைத்து, லசந்த சுட்டுக் கொல்லப்பட்டார்.

தனது வீட்டிலிருந்து காரில் – அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, துப்பாக்கிதாரிகளால் லசந்த சுடப்பட்டார்.

லசந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சுறுசுறுப்படைந்தமை குறிப்பிடத்ததுக்கது.

இந்தக் கொலை தொடர்பில் ராணுவ புலனாய்வு அதிகாரியொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்