அவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, முன்னாள் மேஜர் ஜெனரல் ஆகியோருக்குப் பிணை

🕔 September 6, 2016

Nissanka senadhipathi - 098வன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அவன்ட் கார்ட் ஆயுதக் களஞ்சியம் காலி துறைமுகத்தில் இயங்கியமை தொடர்பில், அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மேற்படி இருவரையும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர் செய்தபோது, சந்தேக நபர்கள் இருவரையும் தலா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ரொக்கப் பிணையிலும், 10 மில்லியம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Comments