இருபதடி பள்ளத்தில் வீழ்ந்தது கார்; படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில்

🕔 September 6, 2016

Car accident - 011
– க. கிஷாந்தன் –

தியத்தலாவ – காகொல்ல பகுதியில் கார், 20  அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் மதில் மீது விழுந்து, இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படுங்காயமடைந்த சாரதி  தியத்தலாவ வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியிலிருந்து தியத்தலாவ பகுதியை நோக்கி சென்ற கார், பண்டாரவளை – தியத்தலாவ பிரதான வீதியில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இன்று  அதிகாலை 05 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றதாக, பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Car accident - 022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்