பொடிமெனிக்கே தடம் விலகியது

🕔 September 5, 2016

Podimenige - 02
– க. கிஷாந்தன் –

பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை  தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது.

இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டியொன்று தடம் விலகியது.

கொட்டகலை – ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில், 110 என்ற கட்டைப்பகுதியில் பிற்பகல் 1.45 மணியளவில் புகையிரதம் தடம் விலகியது. எனினும் பயணிகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புகையிரத பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன்பின் மலையக புகையிரத சேவை வழமைக்கு திருப்பும் என்றும், நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.Podimenige - 01 Podimenige - 03

Comments