மலேசியாவிலிருந்து நாடு திரும்பினார் மஹிந்த
மலேசியாவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, தனது குழுவினருடன் இன்று திங்கட்கிழமை காலை நாடு திரும்பினார்.
ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளினுடைய மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, மஹிந்த ராஜபக்ஷ, தனது குழுவினருடன் கடந்த வியாழக்கிழமை மலேசியா சென்றிருந்தார்.
இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின்கோலாலம்பூரில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாகிம் அன்சார் மீது, ஆர்ப்பாட்டக்காரர் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.