ஏலமெடுக்கச் சென்ற நபரைக் காணவில்லை; திருகோணமலையில் சம்பவம்

🕔 September 5, 2016

Missing - 097– எப். முபாரக் –

லங்கை வங்கியின் திருகோணமலை கிளையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நகைகளை ஏலத்தில் கொள்வனவு செய்வதற்காகச் சென்ற நபரொருவரைக் காணவில்லை என்று, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 களுத்துறை மாவட்டம் அட்டுலுகம – மாவத்த பகுதியைச்சேர்ந்த எம்.எச். நஸ்ரின் (36 வயது) என்பவரே இவ்வாறு காணமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அட்டுலுகம பகுதியிலிருந்து திருகோணமலை இலங்கை வங்கிக்கு ஏல விற்பனையில் நகைகளை கொள்வனவு செய்வதற்காக மேற்படி நபர் வந்திருந்தார். இந்த நிலையில், தண்ணீர் குடிப்பதற்காக வங்கிக்கு வௌியே சென்றவரை காணவில்லையெனவும் அவரிடம் 20 லச்சம் ரூபாய் பணம் கைவசம் இருந்ததாகவும் அவருடன் வருகை தந்த முகம்மட் லெப்பை முஹிதீன் பிர்தௌஸ் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார் என்று, பொலிஸார் கூறினர்.

இம்முறைப்பாடு தொடர்பாக வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சீசீடி கமராவை சோதனை செய்துள்ளதாகவும், விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்