சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது
கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் விவகாரம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் இருவரும், 22 மற்றும் 23 வயதினையுடையவர்களாவர். இவர்கள் கொழும்பு – கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைத் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சகீப் சுலைமான் கடத்திச் செல்லப்பட்ட பகுதிகளில் இருந்த சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றர்.