பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்க மறியல்

🕔 September 1, 2016

Rape - 011– எப். முபாரக் –

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது.

சீனக்குடா, தீவரக்கம்மானை பகுதியைச் 35 வயதுடைய சந்தேக நபரான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரையே, இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி. விஸ்வானந்த பெர்ணாண்டோ உத்தரவிட்டார்.

குறித்த சந்தேக நபர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், சிறுமியின் வீட்டில் யாருமில்லாத நிலையில், குறித்த  சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாக சிறுமியின் பெற்றோர், சீனக்குடா பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

இதற்கமைய, குறித்த சந்தேக நபரை செவ்வாய்கிழமை கைது செய்த பொலிஸார், நேற்று புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

Comments