அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் முப்பெரும் விழா; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

🕔 August 31, 2016

Hakeem - Haj - 02 – றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதி நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள், நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக, வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பிரதம அதிதியாக மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.

மேற்படி விழாவின் போது, கிழக்கு மாகாணத்தின் மூன்றாவது ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலைக்கான நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்படவுள்ளது. மேலும், இதன்போது, இவ் வைத்தியசாலைக்கான உபகரணங்களும், தளபாடங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் நக்பர் கூறினார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.எம். ஜவாத், ஐ.எல்.எம். மாஹிர், ஏ.எல்.எம். தவம் மற்றும் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்